×

920 குழந்தைகளிடம் தடுப்பூசி பரிசோதனை

மும்பை: அடுத்த மாதம் கோேவாவாக்ஸ் தடுப்பூசியை 920 குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை நடத்த இருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசி 93 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இறுதி கட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் போடலாம் என்பதே சிறம்பம்சமாகும். இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவாவாக்ஸ் என்ற பெயரில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. புனேவில் முதல் தொகுப்பு தடுப்பூசி உற்பத்தி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கோேவாவாக்ஸ் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தும் முயற்சியை தொடங்க இருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனை அடுத்த மாதம் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புனேவில் 2 இடங்கள் உட்பட மகாராஷ்டிராவில் இடங்களிலும், டெல்லி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் 5 இடங்களிலும் என 10 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், 920 குழந்தைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். 12-18 வயதுக்கு உட்பட்ட 460 குழந்தைகளுக்கும், 2-11 வயதுக்கு உட்பட்ட 460 குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டு ஆய்வு செய்யப்படும். 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படும்.  ஏற்கனவே,  ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி தனது பரிசோதனையை தொடங்கி உள்ளது.



Tags : Vaccination testing in 920 children
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!