×

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பொறுப்பை கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கலாமா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பொறுப்பை கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கலாமா? போலிச் சான்றிதழ் பெறும் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யனார்பள்ளி ஊராட்சி தலைவராக சி.லட்சுமி நாகசங்கர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியின வகுப்பினர் என லட்சுமி நாகசங்கர் போலிச் சான்றிதழ் பெற்றதாக நிர்குணா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பட்டியலினத்தவர் உரிமையை மற்றவர்கள் போலிச் சான்றிதழ் மூலம் தட்டிப்பறிப்பதை தடுப்பது பற்றி நீதிபதி யோசனை செய்தார். பழங்குடியின வகுப்பினர் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய லட்சுமி நாகசங்கருக்கு நீதிமன்றம் ஆணையிட்டது. நிர்குணா என்பவரின் மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூலை 7-க்கு ஒத்திவைத்தார்.


Tags : Kottayam ,Government of Tamil Nadu , Can the responsibility of issuing caste certificates to Scheduled Castes and Scheduled Tribes be handed over to Kottayam? Question by the High Court to the Government of Tamil Nadu
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது