திருச்செந்தூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள திமிங்கலம் உமிழும் அம்பர்கிரீஸ் பறிமுதல்!: போலீசார் விசாரணை ..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் காரில் கடத்திவரப்பட்ட திமிங்கலம் உமிழும் அம்பர்கிரீஸ் மெழுகை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது தஞ்சாவூரில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் திமிங்கலம் உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அம்பர்கிரீஸ் என்ற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காரில் இருந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அவர்கள் அனைவரும் தஞ்சாவூர், விருதுநகர், நாகப்பட்டினம், திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மெழுகு இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் 2 கோடி ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது. 

பறிமுதல் செய்யப்பட்டுள்ள மெழுகு, வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை பொருள் என்று போலீசார் கூறியுள்ளனர். பிடிபட்ட 6 பேரையும் போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

Related Stories:

More
>