×

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி விவகாரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது வழக்குப்பதிவு செய்யகோரி மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்தியநாராயணன் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாசன் தாக்கல் செய் மனு: தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்தியநாராயணன். இவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி, சுமார் 1 கோடி ரூபாய் செலவு செய்து முறைகேடு செய்துள்ளார். 2018-19ம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் ரூ.30 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளார்.

அதேபோல், 2017-18ம் ஆண்டு தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சட்டத்திற்கும், அரசாணைக்கும் புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.  இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  வரும் 27ம் தேதி இந்த மனு குறித்து  லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

Tags : AIADMK ,MLA ,Satya , Petition to file case against former AIADMK MLA Satya in block development fund fraud case
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்