×

ஸ்புட்னிக் வி தடுப்பூசி சென்னை வந்தது சோதனைக்கு பின் தனியார் மருத்துவமனையில் அறிமுகம்

சென்னை: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி சென்னை வந்துள்ள நிலையில், சோதனைக்கு பின் தனியார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ரஷ்யாவின் 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்கள் கடந்த மாதம்  ஐதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை விரட்டும் கருவியாக உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி அனுமதி பெற்ற இந்த தடுப்பூசி  ஐதராபாத்திலுள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 30 லட்சம் மருந்துகள் வந்தடைந்துள்ளது. -20 டிகிரி செல்சியஸில் இது பாதுகாக்கப்பட வேண்டும். அதன்படி பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அப்போலோ மருத்துவமனையில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதன் விலை ஒரு டோஸ் ரூ.1195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் செலுத்தப்படும் டோஸ் விலை ரூ.995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்புட்னிக் வி மூலமாக கொரோனாவுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்ய இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டாக்டர் ரெட்டிஸ் லேபாரடரீஸ் தலைமை இடமான ஐதராபாத்தில் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது சென்னை உட்பட ஒன்பது நகரங்களில் சோதனை ஓட்ட பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் -18 டிகிரியில் தடுப்பூசி சேமித்து வைத்து தடுப்பூசி மையங்களுக்கு அனுப்ப முடிகிறதா, கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய முடிகிறதா என்பது சோதித்து பார்க்கப்படும்.  அதன்பிறகு சென்னையில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லேபாரடரீஸ் ஊழியர்களுக்கு ஓரிரு நாட்களில் ஸ்புட்னிக் வி செலுத்தப்படும். அதன்பிறகு அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா பெங்களூரு, விசாகப்பட்டினம், கோலாபூர் ஆகிய நகரங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Chennai , The Sputnik V vaccine was introduced in a private hospital in Chennai after testing
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...