×

வன விலங்குகளுக்கு கொரோனாவை தடுக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 6 பேர் குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 நோய் தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு  சரணாலயங்களில் உள்ள விலங்களுக்கு நோய்த்தொற்றுகளை தடுக்கவும், குறைக்கவும்  மற்றும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத் தலைவர்), முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சிறப்பு செயலாளர் (வனம்), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்-வனத் துறை, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், மேம்படுத்தப்பட்ட வனஉயிரின  பாதுகாப்பு நிறுவனம்,  முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சு.சுந்தரராஜூ, வனவிலங்கு பாதுகாவலர் தியடோர் பாஸ்கரன்  ஆகியோரை உள்ளடக்கிய 6 உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு ஒன்றினை அமைத்துள்ளது.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : IAS ,Tamil Nadu government , 6-member team led by IAS officer to prevent corona for wildlife: Tamil Nadu government order
× RELATED முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்