×

ஆன்லைன் கேமிங் உலகில் நுழையும் ஜேக் ஸ்பேரோ கதாபாத்திரம்!: ரசிகர்கள் பெரும் வரவேற்பு..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெபின் நடிப்பில் உலகெங்கும் புகழ்பெற்ற திரைப்படம் தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன். இந்த படத்தின் கதையினை அடிப்படையாக கொண்டு டிஸ்னி நிறுவனம் வெளியிடும் புதிய ஆன்லைன் கேம் விளையாட்டின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


ஜேக் ஸ்பேரோ. இந்த பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பில் 2003ம் ஆண்டில் தொடங்கி 2017ம் ஆண்டு வெளியான தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் திரைப்படங்களுக்கு உலகெங்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தில் ஜேக் ஸ்பேரோவாக வளம் வந்த ஜானி டெப்புக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. 


ஹாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக மாறியுள்ள ஜேக் ஸ்பேரோ, தற்போது ஆன்லைன் கேம் உலகிலும் நுழையவுள்ளது. சீ ஆஃப் தீவ்ஸ் - ஏ பைரேட்ஸ் லைஃப் எனும் பெயரில் உருவாகி உள்ள இந்த கேம் -ஐ பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தை தயாரித்த டிஸ்னி நிறுவனமே வெளியிடுகிறது. 


சீ ஆஃப் தீவ்ஸ் கேம் பல பாகங்களாக வெளியான நிலையில் தற்போது  பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தில் கதைக்களத்தோடு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் திரைப்படத்தில் ஜேக் உடன் வளம் வந்த பார்போசா, ஜேம்ஸ் நோரிங்டன், பூட்ஸ் தீப்ஸ், கிப்ஸ் ஆகிய கதாபாத்திரங்கள் இந்த கேமிலும் இடம்பெற்றுள்ளன. 


படத்தில் வில்லனாக தோன்றிய டேவி ஜான்ஸ் கதாபாத்திரம், இதில் விளையாடுபவர்களை விரட்டி விரட்டி கொள்பவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வில்லனிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க விளையாடுபவர்கள் ஜேக்கின் அறிவுரைகளை கேட்க வேண்டுமாம். 


வீடியோ கேமின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ள டிஸ்னி நிறுவனம் வரும் 22ம் தேதி கேம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. கேமின் முன்னோட்டத்திற்கே பெரும் வரவேற்பு அளித்துள்ள ரசிகர்கள் ஜேக் ஸ்பேரோவுக்காக காத்திருக்கின்றனர். 



Tags : Jake Sberrow , Online gaming, Jack Sparrow, character
× RELATED மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ்...