×

கள்ளப் பணத்தின் சொர்க பூமியாக மாறும் சுவிஸ் வங்கிகள்!: இந்தியர்கள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.20,706 கோடி டெபாசிட்..!!

பெர்ன்: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 20 ஆயிரத்து 706 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஸர்லாந்தில் உள்ள வங்கிகள் கள்ளப்பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக உள்ளது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை சுவிஸ் தேசிய வங்கி  வெளியிட்டுள்ளது. 


அதன்படி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சுவிஸ் வங்கிகளில்  20 ஆயிரத்து 706 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச தொகையாகும். 2019ம் ஆண்டு இறுதியில் இந்த தொகை 6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. தற்போது சுவிஸ் வங்கிகளில் உள்ள 20 ஆயிரத்து 706 கோடி ரூபாயில் 4 ஆயிரம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags : Indians , Counterfeit money, Swiss bank, Indian, Rs 20,706 crore deposit
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...