×

ஜெய் ஸ்ரீராம் கூறுமாறு இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட வீடியோ விவகாரம் : ட்விட்டர் இயக்குனர் நேரில் ஆஜராக உ.பி.போலீஸ் சம்மன்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் லோனி பகுதியில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில் ட்விட்டர் இந்தியாவின் மேலாண் இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காசியாபாத் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் காசியாப்பாத்தை அடுத்த லோனி பகுதியில் கடந்த 5ம் தேதி அப்துல் சமாத் என்ற இஸ்லாமிய முதியவரை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

முதியவரின் தாடியை நறுக்கிய அந்த கும்பல், வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் என்று கூறும்படி தாக்கியதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காசியாபாத் போலீசார், மதப் பிரச்சனை காரணமாக முதியவர் தாக்கப்படவில்லை என்று கூறினர். சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில், வீடியோவை பகிர்ந்ததாக ட்விட்டர் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகை ஸ்வாரா பாஸ்கர் உள்ளிட்டோர் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

முதியவர் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து 7 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ட்விட்டர் இந்தியா மேலாண் இயக்குனருக்கு காசியாபாத் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார். இதனிடையே உத்தரப் பிரதேச போலீசாரின் நடவடிக்கைகள், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி செயல்படுவதை தடுப்பதாக பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பான எடிட்டர்ஸ் கில்டு கண்டனம் தெரிவித்தது. ஊடகவியலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Tags : Jai Shriram ,UP ,Twitter , லோனி
× RELATED ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே...