×

மணலூரில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்!: முதன்முறையாக கண்டெடுக்கப்பட்ட சிறு குழந்தையின் எலும்புக்கூடு..ஆய்வாளர்கள் வியப்பு..!!

சிவகங்கை: தமிழர் நாகரீகத்தின் தாய்மாடி என போற்றப்படும் கீழடி அகழாய்வில் ஒரு பகுதியாக உள்ள மணலூரில் முதன்முறையாக சிறு குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல்துறை தொடங்கிய வைகைக்கரை அகழாய்வில் தமிழர்களின் நாகரீக வளர்ச்சியின் அடையாளங்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்ததன் மூலம் தமிழரின் பெருமை உலகமெங்கும் நிரூபிக்கப்பட்டது.


மூன்றாம்கட்ட அகழாய்வு பணியோடு ஆய்வை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள, 4ம் கட்டத்தில் இருந்து அகழாய்வு பணியை தமிழக தொல்லியல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கீழடியை தொடர்ந்து அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 13ம் தேதி முதல் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது. 


மணலூரில் கடந்த மே மாதம் 5ம் தேதி தொடங்கிய பணிகள், ஊரடங்கால் நிறுத்தப்பட்டு 8ம் தேதி முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மணலூரில் இதுவரை 3 குழிகள் தூண்டப்பட்டுள்ளதில் இரண்டாவது குழியில் சிறு குழந்தையின் எலும்புக்கூட்டின் மேற்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. 


இதன் மூலம் முழுக்க முழுக்க மனிதர்கள் வாழ்ந்த மற்றும் தொழிற்கூடங்கள் இயங்கி வந்த இடம் என்று கருதப்பட்டதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பப்பட்ட பின்னரே அதன் காலம் தெரியவரும். 


6ம் கட்ட அகழாய்வின் போது கொந்தகையில் மட்டுமே எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது முதன்முறையாக மணலூரில் குழந்தையின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியதோடு தமிழர் நாகரீகத்தின் அறியப்படாத அதிசயங்களை உலகத்திற்கு எடுத்துரைக்கும் என்பதில் அய்யம் இல்லை.Tags : Manalur , Manalur, excavation, small child, skeleton
× RELATED கீழ்வேளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 70 செம்மறி ஆடுகள் பலி