குமரி முழுவதும் மீண்டும் சாரல் மழை: மேலும் 5 வீடுகள் இடிந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தநிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை நேற்று பகலிலும் நீடித்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் பகல் 1 மணி முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக சிற்றார்-2ல் 17 மி.மீ மழை பெய்திருந்தது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழை காரணமாக மண் சுவரினால் ஆன வீடுகள்  இடிவது தொடர்கிறது. விளவங்கோடு தாலுகா பகுதியில் மேலும் 5 வீடுகள் மழை காரணமாக இடிந்தன. மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories:

>