×

நாடு முழுவதும் 1467 மருத்துவர்கள் கொரோனா பணியில் உயிர் தியாகம் செய்துள்ளனர் :இந்திய மருத்துவர்கள் சங்கம்

டெல்லி : கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் மருத்துவ சேவையில் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளதாக ஐஎம்ஏ என்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 84,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 70 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா தொற்று குறைந்தாலும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 4002 பேராக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் இதுவரை 1467 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2ம் அலையில் மட்டும் 719 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர். அதில் அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தில் 111 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். டெல்லியில் 109 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு அதே நோய்க்கு உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 63 பேரும் தெலுங்கானாவில் 36 பேரும் ஆந்திராவில் 35 பேரும் ஒடிசாவில் 28 பேரும் மராட்டியத்தில் 23 பேரும் கொரோனா பணியில் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.தமிழ்நாட்டில் இதுவரை 123 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 2வது அலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 32 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.


Tags : Corona ,Association of Physicians of India , மருத்துவர்கள்
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...