×

தமிழகத்தில் முதன்முறையாக புதிய உச்சம் கொடைக்கானலில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது: பொதுமக்கள் கடும் பாதிப்பு

கொடைக்கானல்: தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர துவங்கியது. வடமாநிலங்களின் பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கிய நிலையில் மும்பையில் கடந்த மே 30ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.19க்கு விற்கப்பட்டது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.87க்கு விற்றது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பெட்ரோல் விலை நேற்று ரூ.102.59க்கு விற்றது. ஒரு லிட்டர் டீசல் ரூ.93.70க்கு விற்பனையாகிறது. இதனால் வாகனங்கள் வைத்திருக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Kodaikanal , For the first time in Tamil Nadu, the petrol price in Kodaikanal has crossed Rs.100
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...