×

பணி இல்லாததால் வருமானவரி செலுத்த தாமதம் ஆகிவிட்டது : கங்கனா ரெனாவத் தடாலடி

மும்பை : கொரோனா ஊரடங்கு எதிரொலியாக பணி இல்லாததால் வருமானவரி செலுத்த தாமதம் ஆகிவிட்டதாக பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தி திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த போதும் தனக்கு தற்போது வேலை எதுவும் இல்லாததால் சரியான நேரத்திற்கு வருமான வரி செலுத்த முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

இன்னும் ஓராண்டுக்கான வரியில் பாதியை அரசுக்கு செலுத்த வேண்டி இருப்பதாக கூறி இருக்கும் கங்கனா, தனது வருவாயில் 45%ஐ வரியாக செலுத்துவதாக குறிப்பிட்டார். வாழ்க்கையில் முதல்முறையாக தாமதம் ஆக வரிசெலுத்தப் போவதாக கூறி இருக்கும் அவர், பாக்கி வைத்து இருக்கும் வரி பணத்தை வட்டியுடன் அரசு வசூலிக்கிறது என்றும் இந்த நடவடிக்கையை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். 


Tags : கொரோனா ஊரடங்கு
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...