×

ராமநாதபுரம் ஜிஹெச்சிற்கு ஆக்சிஜன் வசதியுடன் ‘ஸ்ட்ரெச்சர்’-கலெக்டருக்கு நன்றி தெரிவித்த மக்கள்

ராமநாதபுரம் : கலெக்டரின் நடவடிக்கையால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனயில் கொரோனா நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க ஆக்சிஜன் வசதியுடன் ஸ்ட்ரெச்சர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவு குறைந்த நோயாளிகளுக்கு அதற்கான படுக்கை வசதி வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அனுமதிக்கப்படும் நோயாளிகளில் சிலருக்கு மூச்சு திணறல் அதிகரிக்கும் போது அவர்களின் நுரையீரலில் கொரோனா கிருமியின் பாதிப்பு, நுரையீரல் செயல்பாட்டை துல்லியமாக கண்டறிய சி.டி.ஸ்கேன் எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளை விட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து சிடி ஸ்கேன் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த இடைவேளையில் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் அதிகரித்து பெரும் அவதி அடைந்து வந்தனர். சிடி ஸ்கேன் முடிவின்படி சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் இது தவிர்க்க இயலாததாக இருந்தது.ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் வசதி கொண்ட ஸ்ட்ரெச்சர் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்திற்கு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் தெரிவித்தார். இதன்படி கலெக்டரின் துரித நடவடிக்கையால், ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்டு செல்லும் வசதியுடன் கூடிய ஸ்ட்ரெச்சர் வாகனத்திற்கு ஏற்பாடு செய்தார். கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் பாதிப்பின்றி சி.டி. ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு நோயாளிகளின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய ஸ்ட்ரெச்சர் வாகனம் மேலும் இரண்டு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Stretcher ,Ramanathapuram ,GH , Ramanathapuram: Due to the action of the collector, oxygen to take CD scans for corona patients at Ramanathapuram Government Hospital
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...