×

மன்னார்குடி மூவாநல்லூரில் மாங்கொட்டை விதைப்பு செய்த வயல்-தோட்டக்கலை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

மன்னார்குடி : மன்னார்குடி அடுத்த மூவாநல்லூரில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள மாங் கொட்டை விதைப்பு செய்யப்பட்ட வயலினை தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவரசன் நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வு குறித்து இளவரசன் தெரிவித்ததாவது : திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் 2021-22ம் ஆண்டி ற்கு மா குருத்து ஒட்டு செடிகள் 8000 எண்கள் உற்பத்தி செய்து ஒருங் கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்கு தேவையான அல்போன்சா ரக மாங்கொட்டைகள் மாவட்டத்திலிருந்து வரவழைக் கப்பட்டு 1.66 லட்சம் மாங்கொட்டைகள் விதைப்பு செய்யப் பட்டுள்ளது.

இந்த விதைப்பிலிருந்து பெறப்படும் மாவேர் செடிகளைக் கொண்டு மா குரு த்து ஒட்டு செடிகள் ரகம் நீலம், பங்கனப்பள்ளி, மல்கோவா, ரூமேனி போன்ற ரங்கள் ஒட்டு கட்டப்படுகிறது. இவ்வாறு ஒட்டு கட்டப்படும் செடிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அனைத்து வட்டாரங்களுக்கும் இப் பண்ணையிலிருந்து விநியோகம் செய்யப்படும்.

இதுபோன்று இவ்வாண்டு கொய்யா பதியன், எலுமிச்சை நாற்றுகள், மல்லி கை பதியன், பப்பாளி ஒட்டு நாற்றுகள் போன்ற செடிகள் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மா, கொய்யா ஒட்டுச்செடிகள் அரசு மானியத்தில் தேவைப்படும் விவசாயிகள் திருவாரூர் மாவட்டத்தின்; அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பரா மரிக்கப்படும் முன்னுரிமை பதிவேட்டிலும் உழவன் செயலி மூலமும் பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவர சன் தெரிவித்தார்.

Tags : Muvanallur, Mannar , Mannargudi: Mango seed sown at Government Horticulture Farm located at Muvanallur next to Mannargudi
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...