தடுப்பூசி பரவலாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்  கொரோனா தடுப்பூசி பரவலாக போடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகள் அறிவித்தாலும், அவற்றை பாதிக்கப்பட்டவர்கள் பெறுவதற்கு ஏதுவாக கொரோனாவால் உயிரிழந்த நபருக்கு அளிக்கப்படும் இறப்பு சான்றிதழில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் என்பதை அழுத்தமாக பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இறப்பு சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: