கொரோனா ஊரடங்கு காலத்தில் தினமும் 1000 பேருக்கு உணவு: நண்பர்கள் குழு அசத்தல்

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதி அருகேயுள்ள தில்லைநாயகம் பிள்ளை தெருவை சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு தினமும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர். காலை 7 மணிக்கு உணவு சமைக்க ஆரம்பிக்கும் இளைஞர்கள் 11 மணிக்குள் உணவை சமைத்து முடித்து மதியம் 1 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.  குறிப்பாக, சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள தூய்மைப்பணியாளர்கள், மருத்துவமனைகளில் வேலை செய்யும் செவிலியர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவு தயார் செய்து வழங்குகின்றனர்.  இதுகுறித்து நண்பர் குழு நிர்வாகி கூறுகையில், ‘‘நாங்கள் காலையில் தினமும் எழுந்து சமைப்பதற்காக  5 மணிநேரம் கஷ்டப்படுவது 1000 பேரின் பசியை போக்குகிறது. சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் எங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40 ஆயிரம் ரூபாய் எங்களது பணத்தை செலவு செய்து பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.  நாங்கள் நல்ல வேலையில் இருப்பதால் பணத்தை பற்றி கவலைப்படாமல் கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் விளம்பரமின்றி செய்து வருகிறோம்’’ என்றார்.

Related Stories:

>