×

மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ சுரங்கபாதை பணி ‘டாடா’விடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில்,2ம் கட்டத்தில் மாதவரம் வேணுகோபால் நகர் முதல் புரசைவாக்கம் கெல்லீஸ் நிலையம் வரை இரண்டு பக்கமும் தலா 9 கி.மீ நீளத்துக்கு  மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைக்கப்படுகிறது. இப்பணிகள் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து டாடா புராஜெக்ட்ஸ்  நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமன் கபில் கூறும்போது; லக்னோவின் சுரங்க மெட்ரோ ரயில் பாதையை வெற்றிகரமாக முடித்தவுடன் எங்கள் நிறுவனம் மும்பை மற்றும் புனேவில் சுரங்க மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே இந்த புதிய உத்தரவு இந்தியா முழுவதும் சுரங்க மெட்ரோ ரயில் பாதைகளை மேற்கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது.கட்டமைப்பு பணிகள் முடிந்ததும், மக்களுக்கு வசதியான, வேகமான மற்றும் சூழல் பாதிப்பு இல்லாத பயண முறையை நிலத்தடி மெட்ரோ வழங்கும். மேலும் உள்ளூர் வணிகங்கள் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். …

The post மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ சுரங்கபாதை பணி ‘டாடா’விடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Tata ,Chennai ,Kelleys ,
× RELATED மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த...