×

மும்பையில் இருந்து வந்த 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கோவை சென்றன

சென்னை: கொரோனா 2ம் அலை அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துவிட்டது. ஆனால், கோவை மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு தற்போது கோவை மாவட்டம் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  இந்நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலிருந்து நேற்று சரக்கு விமானத்தில் 143 கிலோ எடையில் 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை விமான நிலையம் வந்தன. விமான நிலைய அதிகாரிகள், அந்த மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து, 6 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் சென்னையிலிருந்து கோவைக்கு  நேற்று சென்ற விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

Tags : Mumbai ,Koh , 6 oxygen concentrators from Mumbai went to Coimbatore
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு