×

கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு வந்தது: அரசு நேரடி கொள்முதல்

சென்னை: .தமிழகத்தில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மேலும் தடுப்பூசிகளுக்கான கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும், உலகளாவிய அளவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு தொகுப்பில் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.தமிழகத்திற்கு நேற்று வந்த 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது- இந்நிலையில் மத்திய அரசு தொகுப்பு இன்றி மாநில அரசே நேரடியாக தடுப்பூசியை  கொள்முதல் செய்ய முடிவு செய்து 3.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று  முதற்கட்டமாக ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வந்தடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு வந்தது: அரசு நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : GoviShield ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இனி உற்பத்தி, விநியோகம் இல்லை...