×

வந்தவாசி அருகே கொரோனாவால் இறந்த மூதாட்டி சடலத்தை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்-கிராம மக்கள் நெகிழ்ச்சி

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாச்சன் மனைவி  முத்தம்மாள்(65).  இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். கணவர் ஏற்கனவே இறந்ததால் முத்தம்மாள் மட்டும் ஆரியாத்தூர் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் முத்தம்மாள் வீட்டின் அருகே ஒரு பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அப்பெண்ணின் வீட்டருகே வசித்து வரும் முத்தம்மாள் உட்பட அனைவருக்கும் நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் முத்தம்மாளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை நேற்று முன்தினம் வந்தவாசி வட்டார மருத்துவக்குழுவினர் முத்தம்மாள் வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இருக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.இதுபற்றி முத்தம்மாளுக்கு தகவல் அளிக்க அவரது உறவினர் சென்றபோது, முத்தம்மாள் வீட்டில் இறந்து சடலமாக கிடந்துள்ளார். இதனால் அவரது சடலம் அருகே செல்ல உறவினர்களும், அருகில் வசித்து வந்தவர்களும் அச்சமடைந்தனர். இதுபற்றி வந்தவாசியில் உள்ள இஸ்லாமிய சமூக அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வந்தவாசி தமுமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு இந்து சம்பிரதாய முறைப்படி, கொரோனா வழிகாட்டுதல்களுடன் அவ்வூர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இது ஆரியாத்தூர் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Vandavasi , Vandavasi: Nachan's wife Muthammal (65) hails from Ariyathur village next to Vandavasi in Thiruvannamalai district. He has 2 sons, 2
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு