×

கொரோனா விழிப்புணர்வு ஆடியோ சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

சென்னை: கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: அனைவரும் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மிகவும் அத்தியாவசியமான விஷயத்துக்காக மட்டுமே வெளியே செல்லுங்கள். எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் டபுள் மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெளிவுபெற்று, உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

வீட்டிலுள்ள பெரியவர்களை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக இருந்தால், கொரோனா பரவல் விரைவில் முடிந்துவிடும்.  பிறகு அவரவர் வேலையை கவனிக்க தொடங்கலாம். கொரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்பதால், உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து, நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாப்போம்.

Tags : Sivakarthikeyan , Corona Awareness Audio released by Sivakarthikeyan
× RELATED காமெடி பண்றவங்கள UNDERESTIMATE பண்ணாதீங்க! Sivakarthikeyan செம Fun Speech at Garudan Audio Launch.