×

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு: குழந்தைகளிடம் தடுப்பூசி பரிசோதிக்க தடையில்லை

புதுடெல்லி: தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக 2 முதல் 18 வயதுக்குட்பட்டோரிடம் மருத்துவ பரிசோதனை நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சஞ்சீவ் குமார் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், ‘குழந்தைகளிடம் நடத்தப்படும் இந்த மருத்துவ பரிசோதனை ஆபத்தானது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும்ம் நீதிபதி ஜோதி சிங் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பரிசோதனைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பாரத் பயோடெக் தங்களது விளக்கத்தை ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்….

The post டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு: குழந்தைகளிடம் தடுப்பூசி பரிசோதிக்க தடையில்லை appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,New Delhi ,Hyderabad ,Bharat Biotech ,India ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...