×

கொரோனா தடுப்பு பணிக்கு ₹41.40 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை9: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில், நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, நேற்றுவரை (28ம் தேதி)  186.15 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இதுவரை பெறப்பட்டுள்ள தொகையிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட முதல்வர் ஆணையிட்டிருந்தார். தற்போது சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Q. ,Stalin , . 41.40 crore allocation for corona prevention work: Order of Chief Minister MK Stalin
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...