×

43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர், நிதித்துறை செயலாளர் பங்கேற்பு

சென்னை: 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் சார்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தற்போது தொடங்கி இருக்கிறது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு இந்த கூட்டமானது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். காணொலி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவிவரக்கூடிய சூழ்நிலையில் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய அத்தியாவசிய மருந்துக்களான ஆக்சிஜன், செறிவூட்டக்கூடிய கருவிகள் ஆகியவற்றிற்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கான மருந்துகள், தடுப்பூசிகள், உபகரணங்கள் ஆகியவற்றிற்கு வரிவிலக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பதோடு இறக்குமதிக்கான சுங்கக்கட்டணத்தை ஸ்விலக்கிக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வரக்கூடிய நிலையில் தான் இன்று மாநில அரசின் சார்பாக மத்திய அரசுக்கு இதுதொடர்பான வேண்டுகோளை நிதியமைச்சர் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஜிஎஸ்டி நிலுவை தொகையும் தொடர்ச்சியாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. 42வது ஜிஎஸ்டி கூட்டத்தில் கூட 4,321 கோடி ரூபாய் நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது நிதிச்சுமை அதிகரித்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு மருந்துகள் போன்றவற்றுக்கான வரிவிலக்கு குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : 4th GST Council Meeting ,Government of Tamil Nadu , GST
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...