×

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் 89 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கோவை வந்தடைந்தது

கோவை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் மேலும் 89 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கோவை வந்தடைந்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் டேங்கரில் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக 27வது முறையாக ரயில் மூலம் தமிழகத்திற்கு திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இருந்து 6 டேங்கரில் 89 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கோவை மதுக்கரை வந்தடைந்தது.

அங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பிவைக்கப்பட்டது. அதாவது கோவை மாவட்டத்திற்கு 4 டேங்கர் லாரிகளிலும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தலா ஒரு டேங்கர் லாரிகளும் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாவட்டத்திற்கு மட்டும் 3வது தவணையாக ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.



Tags : Odysa , oxygen
× RELATED ஜவாத் புயலின் தீவிரம் மற்றும்...