×

பொது விநியோக திட்டத்திற்காக பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்கால தடை: மதுரைக்கிளை

மதுரை: பொது விநியோக திட்டத்திற்காக பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டெண்டரில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டது. மக்களின் உடல் நலனை கெடுக்கும் வகையில் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் சுகாதாரமான உணவு உட்கொள்வது என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். 


இதனால் ஒவ்வொருவருக்கும் கலப்படம் இல்லாமல் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசுகளின் கடமையாகும் என மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் விற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கொரோனா தொற்று காலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அவசர கால டெண்டர் விடப்பட்டது என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.



Tags : Maduro , Interim ban on public supply, pulses, cooking oil, tender
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...