×

முழு ஊரடங்கு எதிரொலி!: மதுரையில் 150 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி..!!

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக  தமிழ்நாட்டில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே அடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர முழு ஊரடங்கு காலத்தில் மக்கள்  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் கிடைக்கும் வகையில் 100 ரூபாய்க்கு உரிய காய்கறி தொகுப்பு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 150 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். தேவைக்கு ஏற்ப கூடுதல் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். 


வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், தேங்காய் உள்ளிட்ட 10  காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 8428425000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களின் விவரங்கள் தெரிவித்தால், வீடு தேடி மளிகை பொருட்கள் விற்பனை செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 



Tags : Moothy ,Maduro , Full Curfew, Madurai, Mobile Vehicle, Vegetable Sale, Minister Murthy
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...