×

தமிழகம் முழுவதும் 18,000 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: முதல்வரின் அறிவுறுத்தலின் படி சென்னை மாநகர மக்களுக்கு காய்கறி விற்பனை திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னை மாநகர ஆணையர் அவர்களும், வேளாண் துறை செயலாளர் அவர்களும், அது தொடர்பான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

அதன் அடிப்படையில் சென்னை மாநகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,610 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் வழங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலமாக கிட்டத்தட்ட 2,000 மெட்ரிக் அளவுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 18,000 வாகனங்களில் காய்கறிகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையை பொறுத்தவரை 15 ஜோன்களில் 200 வார்டுகளில் காய்கறிகள் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும். காய்கறிகள், பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044-22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காய்கறி விநியோகம் நடைபெறும். காய்கறி மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும்.

காய்கறி, பழங்கள் விநியோகத்தை கண்காணிக்க தோட்டக்கலை, வேளாண்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு காய்கறி, பழங்கள் 3,838 வாகனங்கள் மூலம் விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.



Tags : TN ,Minister ,MD ,K Panerschelvam , MRK Panneerselvam
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை