×

தனிநபர் வருமானம் இந்தியாவை முந்தியது வங்கதேசம்

புதுடெல்லி: தனிநபர் ஆண்டு வருமானத்தில் இந்தியாவை வங்கதேசம் முந்தி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது. கொரோனா விவகாரத்தை தொடர்ந்து சீனாவிலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் வங்கதேசத்தில் கிளைகளை அமைக்க முன்வருகின்றன. இந்நிலையில்,  கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் தனிநபர் ஆண்டு வருமானத்தில் வங்கதேசம், இந்தியாவை முந்தி உள்ளது.

2020-21ம் நிதியாண்டில் வங்கதேசத்தின் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 66,951 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 50,672 ஆக இருந்தது. வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன்  ஒப்பிடும்போது ரூ.20,500 அதிகமாகும். இந்தியாவில் 2020-21ம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 42,131 ஆக உள்ளது.  2007ம் ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாதியாக இருந்தது  குறிப்பிடத்தக்கது.

Tags : Bangladesh ,India , Bangladesh surpasses India in per capita income
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...