×

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், தேனி ,திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள், தேனி, கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 24ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 25ஆம் தேதி கன்னியாகுமரி ,தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Theni ,Dindigul ,Nilgiris ,Meteorological Department , Theni, Dindigul, Nilgiris and other districts in Tamil Nadu are likely to receive showers for the next 5 days: Meteorological Department
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...