×

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் நியமனம்: துணைநிலை ஆளுநர் தமிழிசை அனுமதி

புதுச்சேரி:  புதுச்சேரியில் என்.ஆர். கங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றியது. இதையடுத்து தே.ஜ.கூட்டணி சார்பில் முதல்வராக ரங்கசாமி கடந்த 7ம் தேதி பொறுப்பேற்றார். தொடர்ந்து  எம்எல்ஏக்கள் பதவியேற்கும் விதமாக தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணனை, ரங்கசாமி பரிந்துரை செய்து கவர்னர் தமிழிசைக்கு 9ம் தேதி கோப்பு அனுப்பினார். ஆனால் அதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையே கொரோனா தொற்றால் ரங்கசாமி பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை முடிந்து கடந்த 17ம் தேதி புதுச்சேரி திரும்பினார். இந்தநிலையில், தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனை  கவர்னர் தமிழிசை நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.


Tags : Lakshminarayanan ,Pondicherry , Lakshminarayanan appointed interim speaker of Pondicherry
× RELATED சேதமான மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்