×

20 அமைச்சர்களுடன் கேரளா முதல்வராக பினராய் பதவியேற்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான புதிய அரசு நேற்று  பதவியேற்றது.கேரளாவில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்த சட்டப்பேரவை  தேர்தலில் ஆளும் இடது சாரி கூட்டணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99  இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதன் மூலம் இடதுசாரி கூட்டணி  தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி  அமைக்கும் நிலை உருவானது. பினராய் விஜயனே மீண்டும் முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து 17 நாட்களுக்குப்  பின்னர் பினராய் விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று  பதவியேற்றது. திருவனந்தபுரம் தலைமை செயலகத்தின் பின்புறமுள்ள சென்ட்ரல்  ஸ்டேடியத்தில் நேற்று மாலை 3.35  மணி அளவில் விழா தொடங்கியது. கொரோனா  நிபந்தனைகளை பின்பற்றி விழா நடத்தப்பட்டது. மேடையில் ஒன்றரை மீட்டர் இடைவெளியிலும், பார்வையாளர்களுக்கான  பகுதியில் 2 மீட்டர் இடைவெளியிலும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கொரோனா  நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்   மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விழாவில் 300க்கும்  குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முதலில் பினராய் விஜயன் முதல்வராக பதவியேற்றுக்  கொண்டார்.  அவருக்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் பதவிப் பிரமாணம் செய்து  வைத்தார். பின்னர், 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் பாஜ தவிர மற்ற 13 மாநில   முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், கொரோனா பரவல் காரணமாக  முதல்வர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தமிழகம் சார்பில் தொழில்  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

மார்க்சிஸ்ட் பொதுச்  செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் பொது செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும்  பலர் பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழாவை  புறக்கணிப்பதாக காங்கிரஸ் கூட்டணி அறிவித்திருந்தது. இதன்படி காங்கிரஸ்  கூட்டணியை சேர்ந்த யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கேரள முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள். அவரது உறுதிப்பாடும் விடாமுயற்சியும்  மக்களுக்கான சமூக சமத்துவம், அமைதி மற்றும் வளம் ஆகியவற்றுக்கு இட்டுச்செல்லும் என்று நம்புகிறேன்’’ என்றார். இேத போல பிரதமர் ேமாடி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



Tags : Binarai ,Kerala Chief Minister , Binarai takes over as Kerala Chief Minister with 20 ministers
× RELATED மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட...