×

காங்கிரஸ் புறக்கணிப்பு: கேரளாவின் புதிய முதல்வராக பினராய் இன்று பதவியேற்கிறார்

திருவனந்தபுரம்: கேரளாவின் புதிய முதல்வராக பினராய் விஜயன் இன்று பதவியேற்கிறார். கேரள வரலாற்றில் தொடர்ந்து 2வது முறையாக இடது முன்னணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன்படி மீண்டும் பினராய் விஜயன் இன்று மதியம் சுமார் 3.30 மணிக்கு முதல்வராக பதவி ஏற்கிறார். புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 21 பேரில் 17 பேர் புதுமுகங்கள். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், தலைமை செயலகம் அருகே உள்ள மத்திய  ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் பதவியேற்பு விழாவில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா  வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி பதவியேற்பு விழா நடத்த கோரி உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் போதும் 500 பேரை வரவழைத்து  பதவியேற்பு விழா நடத்துவது ஏற்கத்தக்கதல்ல, விழாவை எளிமையாக நடத்த  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் இன்றைய  விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது. வீடுகளில்  இருந்து விழாவை டிவியில் பார்க்க காங்கிரஸ் கூட்டணி தீர்மானித்துள்ளது.  

சுகாதாரத்துறைக்கு பெண் அமைச்சர்
கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான துறைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா  சிறப்பாக செயல்பட்டார். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இவர் உரிய நடைவடிக்கை மேற்கொண்டதால் சர்வதேச அளவில் இவருக்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைத்தன. ஆனால் சைலஜாவுக்கு அமைச்சர் பதவி இம்முறை வழங்கப்படவில்லை. இந்நிலையில் சைலஜா வகித்து வந்த சுகாதாரத் துறை, ஆரன்முளா தொகுதியில் வெற்றி பெற்ற வீணா ஜார்ஜுக்கு வழங்கப்படுகிறது.அதே சமயம் சைலாஜவுக்கு அமைச்சர் பதவி தராததால் பினராய்க்கு சொந்த கட்சியிலும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

Tags : Congress ,Binarai ,Kerala , Congress boycott: Binarai takes over as Kerala's new chief minister today
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...