×

கொரோனா சிகிச்சையிலிருந்து ரெம்டெசிவிர் விரைவில் நீக்கம்?: டெல்லி டாக்டர் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: பிளாஸ்மா தெரபியை தொடர்ந்து கொரோனா சிகிச்சைக்கான பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து நீக்குவது குறித்து விரைவில் பரிசீலீக்கப்படும் என டெல்லியின் முன்னணி டாக்டர் ஒருவர் கூறியிருக்கிறார்.
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உயிர்காக்கும் மருந்தல்ல, அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் தர முடியாது என பலவிஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறினாலும், ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் டி.எஸ்.ரானா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறைப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த ஒரு நோயாளியிடம் இருந்து ரத்தத்தை எடுத்து மற்றொரு கொரோனா தொற்று நோயாளிக்கு வழங்கப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்ட நோயாளியின் உடம்பில் செலுத்தப்படும் ரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை அழிக்கும் என சொல்லப்பட்டது. அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் இந்த சிகிச்சை முறை தொடங்கப்பட்டாலும், ஓராண்டில் இதற்கு பலன் இல்லை என உறுதியாகி தற்போது மத்திய அரசு நீக்கி உள்ளது. இனி பிற மருந்துகளைப் பற்றி பார்த்தோமானால், கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவர் எந்த மாயாஜாலத்தையும் செய்யவில்லை என்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் செயல்படவில்லை. எனவே விரைவில் இந்த தடுப்பு மருந்தும், மத்திய அரசின் சிகிச்சை பட்டியலில் இருந்து விரைவில் நீக்கப்படலாம். தற்போது நாங்கள் வைரசை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்கிறோம். இந்த தொற்றுநோய் குறித்து முழு அறிவையும் மருத்துவ சமூகம் பெற்றதும், கொரோனாவுக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Delhi , Remtecivir soon to be removed from corona treatment ?: Delhi doctor sensational information
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!