×

நியூசி.க்கு எதிரான 2 டெஸ்ட் இங்கிலாந்து அணி அறிவிப்பு: பேர்ஸ்டோவ், பட்லர், சாம்கரனுக்கு வாய்ப்பு இல்லை

லண்டன்- இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் ஜூன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. இதற்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 2-6ம் தேதிவரை லண்டனிலும், 2வதுடெஸ்ட் ஜூன் 10 முதல் 14ம் தேதி வரை பர்மிங்காமிலும் நடைபெற உள்ளது. இதற்காக 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் ஆடிய பேர்ஸ்டோவ், பட்லர், சாம்கரன், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை. அணி விபரம்: ஜோ ரூட் (கேப்டன்) ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேம்ஸ் பிரேசி, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், டோம் சிபிலி, ஆலி ஸ்டோன், மார்க் வூட்.

Tags : Newsy ,England ,Bayerstow ,Butler ,Samkeran , England announces 2 Tests against New Zealand: Burstow, Butler, Samkaran out of contention
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்