×

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா.வின் உடல் தமிழக அரசின் முழு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம்

தூத்துக்குடி: கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. உடல் தமிழக அரசின் முழு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் இடைசெவலில் உள்ள தோட்டத்தில் காவல்துறையின் குண்டுகள் முழுங்க இறுதிச் சடங்கு நடந்தது. தமிழக வரலாற்றில் எழுத்தாளா் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். கனிமொழி, சபாநயகர் அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் எழுத்தாளா்கள் கி.ரா.உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கி.ரா. மறைவுக்கு நேற்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்தனர். 


மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என திமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். கி.ரா. படித்த இடைசெவல் ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் எனவும் கூறினார். கி.ரா. நினைவை போற்ற அவரது புகைப்படங்கள், படைப்புகளுடன் ஓர் அரங்கம் நிறுவப்படும் எனவும் தெரிவித்தார். எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது முதிர்வு மற்றும்  உடல்நிலை பாதிப்பால் காலமானார்.



Tags : Literature ,Ki. Ra. Vin ,Tamil Nadu , Father K.R., body, full respect, cremation
× RELATED குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால...