×

தமிழகத்தில் 1 லட்சம் கோயில் மனைகளுக்கு வாடகை நிர்ணயம், வசூல் பாக்கி குறித்து வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும்: கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம், அறநிலையத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர்  சங்க தலைவர் பாலசுப்ரமணியன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* கடந்த 2004ம் ஆண்டு அதிமுக அரசால் புகுத்தப்பட்ட 34ஏ சட்டப்பிரிவின் படி கோயில் மனை குடியிருப்போருக்கு பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டதால் கோயில் மனைகளில் குடியிருப்போர், கடைகள், வைத்திருப்போர் பெருமளவு  பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து  கோயில் மனை குடியிருப்போரின் வேண்டுகோளை ஏற்று  கலைஞர் கடந்த 2010 ல் கொண்டு வந்த அரசாணையை புறந்தள்ளி 2016ல் முதல் 34 ஏன் படியே கோயில்மனைகளுக்கு பல மடங்கு வாடகை  உயர்த்தி முன்தேதியிட்டு அறிவிப்பு கொடுத்துள்ளதை ரத்து செய்து கலைஞர் அரசாணையின் படியே வாடகை வசூல் செய்ய வேண்டும்.

* கோயில் மனைகளுக்கு வாடகை நிர்ணயம், வசூல் பாக்கி போன்ற விவரங்கள், சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் வரி போன்ற இனங்களில் கடைபிப்பது போன்று வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும்.
* பழுத பட்ட வீட்டினை, கடையை பழுது பார்க்கவும், விரிவாக்கம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளதை நீக்க வேண்டும்.

* கோயில் மனைகளில் குடியிருப்போர், கடைகள் வைத்திருப்போர் பிரச்னைகளுக்கு தீர்வு காண அறநிலையத்துறை, கோயில் மனை குடியிருப்போர் சங்கம் அடங்கிய முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும்.
* வீடு மற்றும் கடையை கட்டாயப்படுத்தி தானமாக எழுதி கேட்கும் அதிமுக அரசால் புகுத்தப்பட்ட அரசாணையை ரத்து செய்து, எந்த வித நிபந்தனையும் இன்றி அவரவர் பெயர்களிலேயே பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu ,Temple House Residents Association ,Minister of Charities , 1 lakh temple premises in Tamil Nadu should be transparent and collection arrears should be followed: Temple House Residents Association, Appeal to the Minister of Charities
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...