×

உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புக்கு ஏற்பாடு

உடுமலை: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க, உடுமலை அரசு மருத்துவமனையில் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த உடுமலை ரோட்டரி சங்கம் முயற்சி மேற்கொண்டது. அதன்படி, சுகுணா பவுண்டேஷன் மூலம், கோவை கிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ரூ.27 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை ரோட்டரி சங்க உறுப்பினர்கள், உடுமலை வியாபாரிகள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு இது அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரு நிமிடத்துக்கு 96 சதவீதம் தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். 24 மணி நேரமும் பயன்பெறும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 17ம் ேததி முதல் இது நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் என ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் திட்ட இயக்குனர் பாலசுந்தரம், இணை இயக்குனர்கள் அருண் கார்த்திக், வெங்கடேஷ், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் விஜயஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Udumalai Government Hospital , Arrangement for oxygen production structure at Udumalai Government Hospital
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில்...