யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் ஜூன் 27ம் தேதி நடக்க இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள், அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், யுபிஎஸ்சி சார்பில் நடப்பு ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. வரும் ஜூன் 27ம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்பட இருந்தது.      இந்த நிலையில் யுபிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,‘கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நாடு முழுவதும் வரும் ஜூன் 27ம் தேதி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வுகள் அனைத்தும் வரும் அக்டோபர் 10ம் தேதிக்கு மீண்டும் நடத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>