பாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் ராகுல் வோஹ்ரா (35), இந்த வார தொடக்கத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில், தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். தாஹிர்பூரின் ராஜிவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த சனிக்கிழமை மாலை துவாரகாவில் உள்ள ஆயுஷ்மான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, பிரபல நாடக இயக்குனரும், நாடக ஆசிரியருமான அரவிந்த் கவுர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ராகுல் வோஹ்ரா கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். எனக்கு நல்ல சிகிச்சை கிடைத்திருந்தால், நான் பிழைத்திருப்பேன் என்று கூறினார். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. மன்னிக்கவும், நாங்கள் உங்கள் முன்பாக குற்றவாளிகளாக நிற்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>