×

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: ஜாமீன் கேட்டு ஆய்வாளர் ஸ்ரீதர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஆய்வாளர் தர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த  தர் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை  கிளை, அதில் முகாந்திரம் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.   

இந்த நிலையில் தர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல் முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. அதில்,‘தருக்கு முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்கிறது. மேலும் அவர் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் வந்தாலும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை கண்டிப்பாக கலைக்க  மாட்டார். அதனால் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sathankulam ,Sreedhar ,Supreme Court , Sathankulam father, son death case: Investigator Sreedhar appeals to Supreme Court seeking bail
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...