×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக சங்கத்தினர் வாழ்த்து

சென்னை,: திரைப்பட சங்க நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்)  தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன், திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு உள்ளிட்டோர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : The Film Association ,Chief Minister ,MK Stalin , The Film Association congratulates Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...