×

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை: மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது; முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 3135 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் இரு தினங்களில் 9636 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்றும் நாளையும் தலா 1665 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Omni ,Minister ,Rajakannappan , Action under the Motor Vehicle Act on Omni buses charging extra fare: Interview with Minister Rajakannappan
× RELATED உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி