×

பலாத்கார வழக்கில் சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு கொரோனா

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரமத்தில் 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் 2014ம் ஆண்டு அசாரம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து  சாமியார் அசாரம் பாபு ஜோத்பூர் சிறையில்  அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆசாராம் பாபு உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவ பரிசோதனையில் ஆசாராம்  மற்றும் அவருடன் இருந்த 12 கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் புதனன்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் எம்டிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags : Asaram Babu , Corona to Preacher Asaram Babu who is in jail in a rape case
× RELATED ஆயுர்வேத சிகிச்சைக்காக ஜாமீன் கோரிய...