கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமைக் காவலர் கமலநாதனுக்கு காவல் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை காவலர் கமலநாதனுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிகரமாக இருந்தது. சென்னையில் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமெடுத்துள்ளது. கொரோனாவால் நேற்று ஒரேநாளில் மட்டும் 6,678 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,70,596 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. 

காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை, மோட்டார் வாகன பிரிவில் தலைமை காவலராக பணியாற்றிய எஸ்.கமலநாதன், கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடந்த 4ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால், கமலநாதன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் காவல்துறை அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். 

Related Stories:

>