×

கடன் மறு சீரமைப்பு செய்ய வசதி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த 50,000 கோடி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:  கடன் மறு சீரமைப்பு: தனி நபர்கள், சிறு, நடுத்தர தொழில் செய்வோர் தங்களது கடன்களை 2020ம் ஆண்டில் மறு சீரமைப்பு செய்யாமல், கடந்த மார்ச் மாதம் வரை ஸ்டாண்டர்டு அக்கவுண்ட் ஆக வகைப்படுத்தப்பட்டிருந்தால், தங்களது கடன்களை 2 ஆண்டுகள் வரை மறு சீரமைப்பு செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 25 கோடி வரை கடன் வைத்துள்ளவர்கள் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். வங்கிகள் கடன் வழங்க உதவி: அதிக கடன் வழங்க ஊக்குவிக்கும் வகையில், வங்கிகளுக்கு 50,000 கோடி நிதி வழங்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வினியோகிப்பவர்கள், முன்னுரிமை மருத்துவ கருவி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேஒய்சி படிவம் தாக்கல் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை காலக்கெடு வழங்கும்படியும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


Tags : Reserve Bank , 50,000 crore to improve health infrastructure to facilitate debt restructuring: Reserve Bank announcement
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...