×

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை

திருவாரூர், ஏப்.4: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கலந்து கொண்டு அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தனது விளையாட்டு துறையில் தமிழகத்தை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது துறை மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ந்தேதி அரசு அலுவலர்களுடன் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் எஞ்சிய திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிலையில் 2வது கட்டமாக இன்று (4ம் தேதி) ஆய்வுக்கூட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி அளவில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு துறைகளை சேர்ந்த உயர் அலுவலர்களுடன் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். இதில் கலெக்டர் சாருஸ்ரீ, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

The post திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Tiruvarur Kotaksiyar ,Tiruvarur ,Tiruvarur Collector ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...