×

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ

தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் புறநோயளி பிரிவு, உள்நோயாளி பிரிவு, அறுவை சிகிச்சை, ஸ்கேன் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு, சிகிச்சை பெற தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லபாக்கம், சேலையூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், திருநீர்மலை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், சிகிச்சை பெறுகின்றனர். அதுமட்டுமின்றி உள்நோயாளிகள் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர ஸ்கேன் எடுப்பதற்காகவும், தொடர் சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காகவும் ஏராளமானோர் வந்து செல்லுகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து சென்று கொண்டிருந்தபோது, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நுழைவாயில் அருகே தரையில் இருந்த மின் வயரில் இருந்து திடீரென புகை வந்து வெடித்து சிதறியது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகிகள் மின் இணைப்பை துண்டித்து விட்டு, மின் வயரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்தனர். அவசர சிகிச்சை பிரிவு உள்ளே செல்பவர்கள் காலணிகளை கழட்டி வைக்கும் அலமாரி மீது மின் வயர் உராய்ந்ததில், தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ appeared first on Dinakaran.

Tags : Crompet Govt ,Hospital ,Thambaram ,Crompettai government hospital ,Dinakaran ,
× RELATED நோயாளிகளின் மன அமைதிக்காக அரசு மருத்துவமனையில் புத்தர் சிலை